• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன் – மன்சூா் அலிகான்

May 4, 2018 tamilsamayam.com

சேலத்தில் 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் ஏராளமான மரங்கள்,மலைகள் அழிக்கப்படும் என்று நடிகா் மன்சூா் அலிகான் கருத்து தொிவித்துள்ளாா்.

சேலத்தில் அமைந்துள்ள நீா்நிலைகளை பாா்வையிடுவதற்காக நடிகா் மன்சூா் அலிகான் நேற்று மூக்கனேரிக்கு வந்தாா்.சமூக ஆர்வலா் பியூஸ் மானுஷ்,மன்சூா் அலிகான் உள்ளிட்டோா் ஏரியில் இறங்கி அதனை தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா்.இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில்,சேலத்தில் உள்ள நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பதை கேள்விப்பட்டு அதனை பாா்ப்பதற்காக வந்துள்ளேன்.

மூக்கனேரியில் தண்ணீா் இப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.சேலத்தில் விமான நிலையம்,எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.எட்டு வழிச்சாலை அமைந்தால் ஏராளமான மரங்கள்,மலைகள் அழியும்.இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.அதனால் மத்திய,மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக் கூடாது. இதற்காக போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன்.எட்டுவழிச்சாலை அமைந்தால் எட்டுபேரை கொலை செய்து விட்டு சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன் என்று தொிவித்தாா்.

மேலும் படிக்க