வரலாற்று கதையான ராமாயணம் 500 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக உள்ளது.
எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான வரலாற்றுத்திரைப்படம் பாகுபலி மிகப்பெரும் வெற்றியை பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனம் வரலாற்று கதைகளின் மீது திருப்பி இருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று கதையான மகாபாரதம் 1000 கோடி செலவில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக மலையாள இயக்குநர் வி.ஏ.குமார் அறிவித்து இருக்கிறார். இதில் பீமனாக நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. அதே போன்று தமிழில் சங்கமித்ரா எனும் சரித்திர படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
இந்நிலையில் ராமாயணத்தை திரைப்படமாக எடுக்கப்போவதாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 500 கோடி ரூபாய் செலவில் ராமாயணம் திரைப்படம் 3Dயில் உருவாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சீதா கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு தெலுங்கில் ராமராஜ்ஜியம் எனும் படம் ஏற்கனவே வெளியாகியது. இதில் பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். தற்போது எடுக்கப்படும் ராமாயணம் படத்தில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா மற்றும் தமன்னா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்