- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக வெளியாகிவுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியானது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படமானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஜினியின் 170வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதனிடையே ரஜினியின் 170வது படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விக்ரமை அணுகியதாகவும், பின்னர் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் புதிய அப்டேட்டாக ரஜினியின் 170வது படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டு கிட்டதட்ட அவர் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது உண்மையானால் 30 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையும் படமாக இப்படம் இருக்கும். அதேசமயம் அமிதாப்பச்சனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு