• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

24 மணி நேரமும் பிக்பாஸ் வீட்டில் நிறைய சண்டைகள் நடக்கும் நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம் மட்டும் தான்– ரம்யா

July 23, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த மாதம் துவங்கியது.ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து மமதி,அனந்த் வைத்தியநாதன்,நித்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணித்தலைவியாக இருந்த ரம்யா டாஸ்கிலிருந்து விலகியதால் எலிமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அவர் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பாடகி ரம்யா வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவரும் பொதுமக்களுக்கு மேலும் பல எதிர்மறை உணர்வுகள்,கருத்துக்களை தான் தந்துள்ளது.ஏற்னகவே நித்யா வெளியேற்றபட்ட போது இதே போன்ற சர்ச்சைகள் கிளம்பியது.தற்போது ரம்யா வெளியேற்றபட்ட போதும் அதே போன்று சர்ச்சை கிளம்பியுள்ளது.இதனால் பலர் தங்களது கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து,ரம்யா தனது ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,கோபப்படக்கூடாது,மற்றவர்களைப் பற்றி புறம் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இருப்பினும் எனக்கு நியாயமாக தோன்றியதால் பிக்பாஸ் வீட்டில் இரண்டு,மூன்று இடங்களில் கோபப்பட்டுள்ளேன். நான் வெளியே வந்ததற்காக பலர் வருத்தப்படுகிறீர்கள்.

இதற்கு மேலும் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியும் என்று நினைக்கவில்லை.பிக்பாஸ் வீட்டில் நடக்கும் 24 மணிநேர நிகழ்வுகளில் நிறைய சண்டைகள் நடக்கும்.அதில் நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம் மட்டும் தான்.ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு.நான் வெளியேறியதற்காக நீங்கள் அனைவரும் சந்தோஷம் தான் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க