• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2.0 உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் சாதனை !

December 6, 2018 தண்டோரா குழு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் கடந்த 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில்,அக்சய் குமார்,எமிஜாக்சன் நடிப்பில்,3D தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது.இப்படம் உலகம் முழுக்க வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

இதற்கிடையில் 2.0 படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது.மேலும்,2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது.2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது.சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமுள்ள 10,000 திரையரங்குகளில் 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிடப்பட உள்ளது.தற்போது 2.0 உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான லைகா கூறி உள்ளது.

மேலும் படிக்க