இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் கடந்த 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், 3D தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது.
இப்படம் உலகம் முழுக்க வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில்,2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது. வட இந்தியாவில் 95 கோடி ரூபாயும், தெலுங்கில் 52 கோடி ரூபாயும் , அமெரிக்காவில் 20 கோடி ரூபாயும் வசூலை வாரி குவித்துள்ளது. சென்னையில் மட்டும் 2.0 திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு