• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹீரோவானார் இயக்குனர் கார்த்திக் நரேன்!

April 3, 2019 தண்டோரா குழு

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இதனையடுத்து அரவிந்தசாமி நடித்த ‘நரகாசுரன்’ படத்தை இயக்கினார். தற்போது ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கும் ‘கண்ணாடி’ படத்தில் இளமையான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க கார்த்திக் நரேன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா நாயரும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் இந்த படம் ஜூலை மாதம் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க