• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிஸ் அடிக்க நான் ரெடி! நீங்க ரெடியா? கேள்வி கேட்ட ராகுல் பிரீத் சிங்

June 2, 2017 tamilsamayam.com

தன்னுடன் நடிக்கும் ஹீரோவுடன் முத்தக்காட்சியில் இணைந்து நடிக்க நான் ரெடி என்று கிளாமர் நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ஸ்பைடர் மற்றும் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு படங்களில் ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். மேலும், சிம்லா மிர்சி என்ற பாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், படங்களில் தான் கவர்ச்சியாக நடித்து வருவது பற்றி ராகுல் பிரீத் சிங் கூறுகையில்,

நடிகைகளை கவர்ச்சியாகவே பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால் தான் நான் கவர்ச்சியாக அதிக கிளாமரில் நடிக்கிறேன். அதே நேரத்தில் படத்தில் என்னுடைய ரோலுக்கும், கதைக்கும் கிளாமர் தேவைப்படாத பொழுது நான் ஒருபோதும் கிளாமரில் நடிப்பதில்லை. இயக்குனர்கள் கிளாமரை கண்டாயமாக்கினால் நான் ஒத்துக்கொள்வதில்லை.

அதே போலத்தான் முத்தக்காட்சியிலும் அவசியம் என்றபோது மட்டுமே நான் நடிக்கிறேன். பெரும்பாலும், நான் நடிக்கிற படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் நான் ஒவ்வொரு கதையையும் கேட்டு நடித்து வருகிறேன். எந்த பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, எனக்கான ரோல் பிடித்தால் மட்டும் அந்தப் படத்தில் நான் நடிப்பேன். ஒரு படத்திற்கு நான் கால்ஷீட் கொடுத்து விட்டால், எக்காரணம் கொண்டும், அந்த கால்ஷீட் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க