இந்தி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் எச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை அடுத்து எச்.வினோத்தின் சொந்த கதையில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆக்ஷன் கலந்த த்ரில்லார் படமாக உருவாகவுள்ள இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையக் குறைத்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இந்தப் படத்தில் அஜித் பைக் ரேஸராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்துக்கான போட்டோ ஷுட் பணிகள் துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘தல 60’ படம் ஆரம்பமாகிடுச்சா என்று ஆச்சர்யமாக புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
“அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது என படக்குழு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு