June 25, 2018
தண்டோரா குழு
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்விக்கு பின் நடிகர் சிம்பு மீது தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.அதன் பின் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த சிம்பு மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்தார்.
அரவிந்த் சாமி,விஜய் சேதுபதி,அருண் விஜய்,ஜோதிகா,அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் என மல்ட்டி ஸ்டார்ஸ் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சிம்பு.ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருகிறார் என சிம்பு மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு இருந்தது.அதனால் தான் அவரை வைத்துப் படமெடுக்கத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயங்கி வந்தனர்.இனிமேல் நான் லேட்டாக வரமாட்டேன் என சிம்பு அண்மையில் வாக்குறுதி கொடுத்தார்.
இதையடுத்து,மீண்டும் சிம்புவிற்கு படவாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் – நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.இப்படத்திற்கு பின் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.