• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

August 29, 2017 தண்டோரா குழு

தல’ அஜித் மற்றும் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான திரைப்படம் ‘விவேகம்’.

விவேகம் படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும் இப்படம் ‘தடைகளை உடைத்து சரித்திரம் படைத்து’ வருகிறது என்றே சொல்லலாம். சுமார் 90 கோடி என்று பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரூ. 120 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி இப்படத்தின் வசூல் இன்று வரை சுமார் 150 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் இது ஆரோக்கியமான வசூல் என்றும் இப்படியே ஒரு வாரம் ஓடினால் விநியோகிஸ்தர்களுக்கு மிக பெரிய லாபத்தை ஈட்டி தரும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிவேகமாக ரூ.6 கோடி கலெக்ஷனை பெற்று சாதனை படைத்துள்ளது விவேகம் படம்.இந்த வரிசையில் பாகுபலி, பைரவா ஆகிய முன்னனி வசூல் படங்களை பின்னுக்குத் தள்ளி விவேகம் படம் முதலிடத்தை பெற்றுள்ளது.

மேலும், இந்தப் படம் மலேசியாவில் 700 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டு இதுவரை ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் ரூ 3 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க