• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் டீசரால் தியேட்டர் உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்

May 12, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசர் நேற்று இரவு சரியாக 12.01க்குவெளியானது. தல ரசிகர்கள் பெரும் எதிபார்ப்பில் இருந்ததால் ரசிகர்களுக்காக திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் டீசரை நேற்று இரவு ஒளிபரப்பியது.

அதை பார்க்க பெரிய ரசிகர் கூட்டமே தியேட்டர் முழுவதும் நிரம்பியிருந்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை ஸ்கிரீனில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

அதில், சிலர் ஸ்கிரீனுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். அதனால் 5 லட்சம் மதிப்புள்ள ஸ்கிரீன் முற்றிலும் சேதமானது.

இந்நிலையில், அதற்கு தியேட்டர் உரிமையாளர் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “டீசரை கொண்டாட அனுமதித்தோம், எங்களுக்கு கிடைத்தது இந்த ரூ. 5 லட்சம் நஷ்டம் தான், நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க