 June 15, 2017
June 15, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                விவேகம் படத்தில் அஜித்திற்கு இணையான வேடத்தில் நடித்திருப்பதாக பாலிவுட் நடிகர் விவேக் ஒபுராய் தெரிவித்துள்ளார்.
3வது முறையாக அஜித்துடன் இணைந்து இயக்குனர் சிவா உருவாக்கியுள்ள விவேகம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அனிருத் இசையில் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
படப்பிடிப்பின் போதே, அஜித்தின் ஒவ்வொரு புகைப்படங்களாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதில், அஜித்துடன் இணைந்து நடித்த விவேக் ஒபுராய் படத்தில் தனது பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனத்திற்கு பேட்டியளித்த விவேக் ஒபுராய், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தின் செயல்களைக் கண்டு தான் மெய்மறந்ததாக குறிப்பிட்டுள்ளார். அஜித் ஒரு தனித்துவமான மனிதர் என்றும் செய்யும் தொழிலில் கச்சிதமானவர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில், அனைவரும் தன்னை வில்லன், நெகட்டிவ் ரோல் என என்னுவதாக தெரிவித்த விவேக் ஒபுராய், தான் அஜித்திற்கு இணையான வேடத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.