February 13, 2018
தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள காலா படத்தின் சண்டை காட்சிகள் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
அந்த வகையில், தற்போதுவிஜய் 62 படத்தின் சண்டை காட்சியும் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மட்டுமில்லாமல் படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தியும் இது எப்படி நடந்தது என முருகதாஸ் மற்றும் படக்குழுவினர் கடும் அப்செட்டாகி உள்ளனர்.