June 23, 2017
தண்டோரா குழு
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 3 வேடங்களில் சிம்பு நடித்துள்ள படம் அன்பானவன் அசராதவன், அடங்காதவன். பல்வேறு சர்ச்சைக்கு பிறகு இப்படம் இன்று வெளியானது.
கிட்டத்தட்ட 6 மாததுக்கு பின் சிம்பு படம் வெளியாவதால், அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று வெளியான “அஅஅ” படத்தின் டைட்டில் கார்டில் சிம்பு வின் பெயருக்கு முன்னால் இருந்த யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்கிவிட்டு, நீங்க இல்லாம நானில்ல என்ற அடைமொழியுடன் எஸ்டிஆர் (STR) என்ற பெயர் இடம்பெற்றது.
சமீபத்தில் வெளியான விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இளைய தளபதி விஜய் என்ற பெயருக்கு பதிலாக தளபதி என்று மாற்றப்பட்டது. தற்போது அந்த வகையில் சிம்பும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.