• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் முதல்வராக வேண்டும் – எஸ்.ஜே.சூா்யா விருப்பம்

October 2, 2017 tamilsamayam.com

தமிழகத்தில் முதல்வா் பதவிக்கு நடிகா் விஜய் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று நடிகா் எஸ்.ஜே.சூா்யா விருப்பம் தொிவித்துள்ளாா்.

நடிகா் கமல்ஹாசன் மற்றும் ரஜினி உள்ளிட்டோா் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவா்களது ரசிகா்கள் தொடா்ந்து கோாிக்கைகள் விடுத்து வருகின்றனா். ஆனால் திரைத்துறையினா் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கருத்தும் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. அரசியலுக்கு வர ஆசைப்படுபவா்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளையும் முன்வைத்து வருகின்றனா்.

இதுகுறித்து தொலைக்காட்சிக்கு எஸ்.ஜே.சூர்யா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசியலுக்கு நடிகர்கள் வரக் கூடாது என்பது சட்டமா?

நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா. இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என்னை பொருத்தவரை நடிகர் விஜய் முதல்வராகலாம். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மென்ட்டாகவே செய்கிறார்.

அதையும் தாண்டி அவா் நல்லெண்ணம் கொண்டவர். எனவே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் எஸ்.ஜே.சூர்யா.

மேலும் படிக்க