• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதிக்கு அன்புடன் உணவு ஊட்டிவிட்ட சிம்பு

May 2, 2018 tamilsamyam.com

செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பில் நடிகர் விஜய்சேதுபதிக்கு சிம்பு உணவு ஊட்டி விடும் புகைப்படம் வெளியாகி, இணையத்தில் வைரலை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் எழுதி இயக்கி வரும் திரைப்படம் செக்கச்சிவந்த வானம். அரவிந்த் சாமி, ஜோதிகா, விஜய் சேதுபதி, சிம்பு, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தமாகியுள்ளார்.

அண்மையில் செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் உள்ளிட்டோர் சம்பந்தபப்ட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அதற்கான புகைப்படங்களும் வெளிவந்து டிரெண்டிங் அடித்தன.

தற்போது நடிகர் சிம்பு, விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டி விடுவது போன்ற புகைப்படம் வெளிவந்துள்ளது. இது படத்திற்காக எடுக்கபப்ட்ட காட்சியா அல்லது படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவமா என்ற விவரங்கள் தெரியவில்லை.

தனது சமகால நடிகர்களுடன் சிம்பு முறைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக அவர் தனது நடிப்பு சகாக்களுடன் சமரசத்துடன் பழகி வருகிறார். நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் தற்போதைய சங்க நிர்வாகிகள் மீது கடும் விமர்சனங்களை சிம்பு முன்வைத்து வந்தார்,

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திரையுலத்தினர் மேற்கொண்டு போராட்ட முயற்சிகளின் போது, சிம்பு விஷால் உள்ளிட்டோர் நல்ல நண்பரகளானதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான புகைப்படங்களும் வெளியாகி கோலிவுட் உலகில் ஆச்சர்யத்தை கிளப்பியது.

மேலும் படிக்க