August 29, 2018
தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக இப்படத்தை AGS மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் AGS நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு வரும் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகலாம் எனவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
விஜய் அட்லி கூட்டணியில் தெரி,மெர்சல் என இருபடங்களும் மாபெரும் பெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
.