February 28, 2018
tamilsamayam.com
விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய்யை இயக்குனர் பாலா கண்டும் காணாததுபோல் இருந்து கொண்டார்.
சமீபத்தில் சினிமா கலைஞர்களுக்கு விகடன் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன், விஜய், இளையராஜா, நயன்தாரா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பின்போது ஒரு காட்சியை பார்த்து விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். இந்த விழாவுக்கு விஜய் வருகை தந்தபோது கமல்ஹாசன், விஜய்சேதுபதி, உள்பட அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று விஜய்யை கைகுலுக்கி வரவேற்றனர்.
ஆனால் இயக்குனர் பாலா, விஜய்யை கண்டுகொள்ளவும் இல்லை, விஜய்யை எழுந்து நின்று வரவேற்கவும் இல்லை. ஆனால் அதே சமயம் விஜய்சேதுபதி அரங்கத்திற்குள் நுழைந்தபோது பாலா கைகுலுக்கி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.