July 3, 2017
தண்டோரா குழு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘2.0’, விஜய் நடித்த ‘கத்தி’ ஆகிய படங்களை அதிக பட்ஜெட்டில் தயாரித்த நிறுவனம் லைக்கா நிறுவனம்.
இந்நிறுவனம் தற்போது இளம் நடிகர்களான ஆர்யா மற்றும் ஜீவா ஆகியோரை வைத்து புது படம் ஒன்றினை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’, ‘எமன்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள இயக்குனர் ஜீவாசங்கர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.