• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரெட்ட தல படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்துள்ளேன் – கோவையில் நடிகர் அருண் விஜய் பேட்டி

December 18, 2025 தண்டோரா குழு

கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ள நடிகர் அருண் விஜய்,தவெக தலைவர் விஜயை ஃபாலோ செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாக உள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய், கதாநாயகியாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய், சித்தி இத்னானி மற்றும் ஜான் விஜய் ஆகியோர் கோவையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முன்னதாக பேசிய அருண் விஜய் ,

இந்த படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், சவாலான கதாபாத்திரமாக இருந்ததால் இதில் நடிக்க முடிவு செய்ததாகவும் கூறினார். படத்தின் முக்கிய தூணாக எடிட்டர் ஆண்டனி இருந்ததாகவும், படம் வேகமாகவும் துல்லியமாகவும் உருவாக காரணமாக இருந்தார் என்றும் பாராட்டினார். நடிகை சித்தி இத்னானி முழு உழைப்பை கொடுத்துள்ளதாகவும், அதிக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் சிறப்பாக வந்துள்ளதாகவும்
தெரிவித்தார்.

மேலும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும் அதில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகவும் கூறிய அவர், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அதிக சிரத்தை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து நடிகர் அஜித்குமார் கார் ரேசிற்கு சென்று விட்டது குறித்தும் நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே பேஷன் (Passion) விஷயத்தில் நடிகர் அஜித்தை பின்பற்றுவதாகவும், அரசியல் (Political) செயல்பாடுகளில் நடிகர் விஜயை பின்பற்றுவதாகவும் இருவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் இருவருமே தனக்கு ஊக்கமாக இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பின்னர் பேசிய நடிகை சித்தி இத்னானி,

இந்த கதையில் நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னுடன் நடித்த அனைத்து சக கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். அதிக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த, ஹாலிவுட் தரத்தில் உருவான இந்த படம், இந்த கிறிஸ்மஸ் அன்று ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ‘இரட்டை தல கிறிஸ்மஸ்’ ஆக இருக்கும் என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நடிகர் ஜான் விஜய்,

நிறைய போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன் ஆனால் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளேன் என்றும் கடின உழைப்புக்கு ஒரு பிராண்ட் அம்பாசிடர் வேண்டுமென்று நினைத்தால் அது அருண் விஜய் தான் என்றும் பெருமிதம் கொண்டார். வழக்கமாக ஹீரோதான் ஹீரோயினை சைட் அடிப்பார்கள் ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள அழகான இந்த ஹீரோயினை நானும் சைட் அடித்துள்ளேன் என்றும் நகைச்சுவையுடன் கூறினார்.

மேலும் படிக்க