February 10, 2018
தண்டோரா குழு
கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.
தனுஷின் வண்டார் பார் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை,சென்னை என விறுவிறுப்பாக நடந்தது. ஏற்கனவே படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதற்கிடையில், காலா படம் முதலில் ரிலீஸ் ஆகுமா ? 2.0 படம் முதலில் ரிலீஸ் ஆகுமா? என செய்தியாளர்கள் கேள்வி ரஜினியிடம் கேட்டபோது, இரண்டு நாட்கலில் அறிவிப்பு வரும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், காலா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் எனக் கூறியுள்ளார். மேலும், மாஸ், தலைவர் ஸ்டைல் போஸ்டரும் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.