• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் தர்பார் படம் குறித்து முக்கிய அறிவிப்பு !

May 16, 2019 தண்டோரா குழு

கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும் சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு மும்பையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது, அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க