• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்தாஜை அழ வைத்த சென்றாயன் துரத்திய மஹத்

June 21, 2018 தண்டோரா குழு

மும்தாஜை அழவைத்ததால், ‘நீ வெளில போடா’ என்று சென்றாயனை மஹத் விரட்டிய சம்பவம் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் நடந்துள்ளது.

தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்2 கடந்த ஞாயிறன்று துவங்கியது.நிகழ்ச்சி துவங்கிய 3 நாட்களிலேயே போட்டியாளர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வரத்துவங்கிவிட்டது.

இந்நிலையில், இன்று புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியானது.அதில்,மும்தாஜ் மற்றும் சென்றாயன் இருவரும் நடனம் ஆடினர்.அப்போது ‘அய்யோ… நான் மும்தாஜ் கூட ஆடிட்டேன்பா’ என சந்தோஷமாகக் கத்தினார் சென்றாயன்.

அப்போது,திடீரென மும்தாஜ் அழ ஆரம்பித்தார்.அங்கிருந்த ஷாரிக் ஹாசன்,ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்கள் அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.இதற்கிடையில், மும்தாஜ் அழுவதைப் பார்த்துக் கடுப்பான மஹத், ‘டேய்… ஏன்டா இப்படிப் பண்ற? நீ வெளில போடா… போடா வெளில’ என்று சென்றாயனைப் பார்த்து திட்டினார் எதுவும் புரியாமல் அதிர்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார் சென்றாயன்.அங்கு என்ன நடந்தது? ஏன் மும்தாஜ் அழுதார்? என்பது இன்றைய ‘பிக் பாஸ் 2’வில் தெரியவரும்.

மேலும் படிக்க