தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பினை துவங்கியுள்ளார்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது‘சீம ராஜா’ என்னும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் ரஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்கவுள்ளார்.ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது