June 13, 2018
தண்டோரா குழு
மா மற்றும் லட்சுமி புகழ் இயக்குனர் சர்ஜூன் உடன் இணைந்து நயன் தாரா தன்னுடைய 63வது படத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.இந்நிலையில்,மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் உடன் இணைந்து தன்னுடைய 63வது படத்தில் நடிக்கயிருக்கிறார்.இதற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகை நயன்தார தற்போது இமைக்கா நொடிகள்,கொலையுதிர் காலம்,சாயிராம் நரசிம்ஹா ரெட்டி, கோலமாவு கோகிலா மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.