• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலையாள பிக்பாஸில் கலந்து கொண்ட 16 பிரபலங்கள் யார் யார் ?

June 25, 2018 தண்டோரா குழு

உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. தமிழில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றி பெற்றார்.

கடந்த வருடத்தில் இருந்து, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது ‘பிக் பாஸ்’. 100 நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின்விதிமுறை.தமிழில் இந்த வருடமும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.இந்நிகழ்ச்சி ஜூன் 17-ம் தேதி தொடங்கியது.இந்நிலையில்,‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மலையாளத்தில் ‘ஏசியாநெட்’ சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.இந்நிகழ்ச்சியை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தொகுத்து வழங்கவுள்ளார்.இந்நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 பிரபலங்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், நடிகை ஸ்வேதா மேனன், சின்னத்திரை நடிகர் தீபன் முரளி, காமெடி நடிகர் ஜெகதீஸ் மகள் ஸ்ரீ லட்சுமி, சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஸ் அரவிந்த், நடிகை ஹிமா சங்கர், நடிகர் மற்றும் பாடகர் அரிஸ்டோ சுரேஷ், சமூக ஆர்வலர் தியா சனா,காமெடி நடிகர் அனூப் சந்திரன்,நடிகர் அதிதி ராஜ், தொழிலதிபர் பஷீர் பாஸி, சின்னத்திரை நடிகர் மனோஜ் வர்மா, தொகுப்பாளனி பியர்ஸ் மானே, டேவிட் ஜான், நடிகர் சாபு, சின்னத்திரை நடிகை அர்ச்சனா சுசீலன், தொகுப்பாளனி ரஞ்சினி ஹரிதாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க