February 9, 2018
தண்டோரா குழு
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில்,பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள்.
இதற்கிடையில், பகத் பாசில் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், அருண் விஜய் இப்படத்தில் இணைத்துள்ளார்.இப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என டைட்டில் சூட்டியுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
இப்படத்தை இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஷூட்டிங்கை துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.