காற்று வெளியிடை வெளியான கையோடு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் மணிரத்னம்.
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு ‘தளபதி’ இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறார், ராம் சரணை வைத்து தமிழ் – தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார் மணிரத்னம் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.ஆனால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து நேரடியாக ஒரு ஹிந்திப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்தனம். இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏற்கனவே மணிரத்னம் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யா ராய் கூட்டணி குரு, ராவணன் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவர் பாலிவுட்டுக்குத் திரும்புகிறார்.சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படம், எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. இதுமாதிரியான படங்களை பாலிவுட்டில் தான் கொண்டாடுவார்கள் என நினைத்து அங்கு செல்கிறாராம்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்