August 28, 2017
தண்டோரா குழு
ரஷ்யாவில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கிய ‘ப்ளூ வேல்’ விளையாட்டினால்உலகில் பல்வேறு நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
நடிகர் விவேக் நடிப்பு மட்டுமின்றி சமூக சார்ந்த கருத்துக்களையும் அவ்வபோது தெர்வித்து வருகிறார். பல சமூக சேவைகளை செய்வது மட்டுமல்லாது அது குறித்த விழிப்புணர்வினையினையூம் மக்களிடையே ஏற்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில், ‘ப்ளூ வேல்’ விவகாரம் குறித்து தனது கருத்தினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், “உடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்!- இதன் அருமை அறியாமல் தற்கொலை (bluewhale) செய்தல் முட்டாள்தனம்! இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம்” என்று கூறியுள்ளார்.