• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ளூசட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – லாரன்ஸ்

August 26, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் விவேகம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் படத்தை பற்றி பல்வேறு வகையில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,இணையதளத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இப்படத்தைப்பற்றியும், அஜீத்தை பற்றியும் விமர்சனம் செய்தது சினிமா துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திரைத்துறையினர் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கோலிசோடா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன், விவேகம் படம் பற்றி தரக்குறைவாகவும், தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அதைபோல் நடிகர் இயக்குனரும் நடிகருமான ராகவா லன்ரான்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ‘நான் விவேகம் படம் பார்த்தேன். அஜீத்தின் கடின உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். படம் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ளூசட்டை மாறன் என்பவர் மோசமாகவும், மனதில் வலியை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
விவேகம் படத்தில் பல காட்சிகள் பிரம்மாண்டமாக, ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர். படக்குழுவினரின் உழைப்பை விமர்சனம் என்கிற பெயரில் சில வார்த்தைகளில் கொச்சைப்படுத்தி விடக்கூடாது. அவரது விமர்சனம் அஜித்தையும் , அவரது ரசிகர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகையால் சினிமாவையும், சினிமாதுறையினரையும் இழிவுபடுத்தும் ப்ளூசட்டை மாறன் மீது தயவு செய்து சினிமா துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க