• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் நடிக்கும் துல்கர் சல்மான் !

March 12, 2020 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக முன்னணி நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் பிருந்தா மாஸ்டர். தற்போது முதல் முறையாக இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவரோடு இணைந்து இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர்.

‘ஹே சினாமிக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இன்று நடத்த இந்த படத்திற்காக பூஜையில் இயக்குநர் மணிரத்தனம் அவரது மனைவி நடிகை சுகாசினி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் நடிகை குஷ்பூ, பிருந்தாவின் சகோதரி கலா, பிரபல இயக்குநர் பாக்கியராஜ், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் எனவும் படம் குறித்த எஞ்சிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழில் அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்கு பிறகு துல்கர் சல்மானின் அடுத்த தமிழ் படமாக இந்த படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க