• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரம்மாண்ட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் அருண் விஜய் !

March 20, 2019 தண்டோரா குழு

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கினார்.

அப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை அருண்விஜய் பிடித்துவிட்டார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தடம் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது அருண் விஜய்க்கு ஒரு புதிய உச்சத்தை பெற்று தந்துள்ளது. தற்போது பாகுபலி புகழ் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது காட்சிகள் நிறைவு பெற்றது.

இந்நிலையில் ரஜினி, கமல், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அருண் விஜய் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க