• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம்பெரும் நடிகர் நீலகண்டன் மறைவு

May 10, 2018 தண்டோரா குழு

மேடை நாடகம்,சினிமா,மற்றும் தொலைக்காட்சியின் பிரபலமான நடிகர் நீலு சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

அந்நியன்,பம்மல் கே. சம்பந்தம்,வீராப்பு,பெரியார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நீலு என்ற நீலகண்டன்(82).இவர் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.வெள்ளித்திரையில் இவர் தோன்றிய முதற்படம் ‘ஆயிரம் பொய்’.இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழ்த்திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள் சிவாஜி கணேசன்,ரஜினி காந்த், கமல்ஹாஸன், அர்ஜூன்,அஜீத்,சரத்குமார்,பிரபு,கார்த்திக்,நாகேஷ்,மாதவன் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.தலைசிறந்த இயக்குனர்கள் பீம்சிங்,கிருஷ்ணன் பஞ்சு,கே.பாலச்சந்தர்,முக்தா சீனிவாசன்,பாரதிராஜா,சுந்தர் சி,சங்கர் ஆகியோரின் இயக்கத்திலும் நடித்துள்ளார்.

மேலும்,சின்னத்திரையிலும் நடித்துள்ள இவர் இதுவரை 7000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க