• Download mobile app
20 Feb 2026, FridayEdition - 3663
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம் – ஹர்பஜன் சிங் டுவீட்

February 18, 2020 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் டுவீட் செய்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டார். தற்போது ஃப்ரெண்ட்ஷிப். படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இப்படத்தை இயக்கித் தயாரிக்கின்றனர்.

அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்திருப்பதாக நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் சதீஷ், “நம் சென்னை ஐபில் அணியில் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் உடன் இணைவது மகிழ்ச்சி” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,

புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம்,

மேலும் படிக்க