• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெடுவாசல் போராட்டத்திற்காக ஜி.வி.பிரகாஷ் புதிய பாடல்..!

March 6, 2017 tamilsamayam.com

நெடுவாசல் போராட்டத்துக்காக ‘தியாகம் செய்வோம் வா’ என்ற புதிய பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உருவாக்கியுள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது அன்றாட அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் மீதான தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கொம்பு வச்ச சிங்கம்டா… என்ற பாடலை வெளியிட்டார். இந்த பாடல் மெரீனா போராட்டத்தில் ஒலிபரப்பப்பட்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த போராட்டத்தை ஆதரித்தும், போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் ‘தியாகம் செய்வோம் வா’ என்ற பாடலை வெளியிடவுள்ளார்.

இந்த ஆல்பத்தின் பாடல்களை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இசை அமைத்து ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியுள்ளார். நெடுவாசல் போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் நேற்று கலந்து கொண்டார்.

மேலும் படிக்க