தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தரமணி படம் மிகவும் பேசப்பட்டது.இதில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகளும் குவிந்தன.இந்நிலையில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு நடிகை ஆண்ட்ரியா பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. “கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் நான் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு போதும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது. திரைப்படத்தில் நிர்வாணமாகக் கூடநான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது