• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை தொடங்குகிறது கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு !

January 17, 2019 தண்டோரா குழு

1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான படம் இந்தியன். இப்படம் மாபெரும் பெற்றி பெற்றது. இப்படத்தில்’உலக நாயகன்’ கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அண்மையில் பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்.

22 வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது லைக்கா நிறுவனம் தயாராகிறது.கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தன. படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களையும் ஷங்கர் நேரில் சென்று பார்த்தார்.
கமல்ஹாசனும் தனது தோற்றத்தை மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்தார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் அவரை வயதான தோற்றத்துக்கு மாற்றி புகைப்படங்கள் எடுத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு பின் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.

இந்நிலையில், தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்ட படக்குழு நாளை (18-ந் தேதி) படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.இந்த தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க