May 26, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் நடிகர் சதிஷ் ஒருவர்.விஜய்,தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பல காமெடி நடிகர்கள்,ஹீரோவாக களம் இறங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சதீஷ்,
‘நான் அறிமுகம் ஆன படம், தமிழ் படம் பாகம்-1. இதன் இரண்டாம் பாகம் முந்தைய பாகத்தைவிட பல மடங்கு சிரிக்க வைக்கும்.இதில் நான் வில்லனாக உயர்வு பெற்றுள்ளேன்.இந்த படத்தில் நான் 15 கெட்டப்கள் போட்டுள்ளேன். எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் இந்த படம் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்.’ என்றார்.