• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் பிக் பாஸ் சீசன் 2-வை பார்ப்பதில்லை – நடிகை ஓவியா

August 24, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் 60 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் நிறைய சண்டைகளும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பார்வையாளர்கள் முகம் சுளித்து வருகின்றனர். இதற்கிடையில், ‘களவாணி’ படத்தில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ சீசன் 1-யில் கலந்து கொண்ட பிறகு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய பின்பும், ஓவியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார். அப்போது, ரசிகர் ஒருவர் “பிக் பாஸ் சீசன் 2-வை பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று ஓவியாவிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஓவியா “நோ கமெண்ட்ஸ்! நான் பிக் பாஸ் சீசன் 2-வை பார்ப்பதில்லை” என்று பதில் அளித்துள்ளார்.

.

மேலும் படிக்க