ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமார் ஜோடியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கியவர்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில்,கோலிவுட்டின் முன்னனி நடிகை நயன்தாராவை விட, மாளவிகாவுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, மாளவிகா இந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அப்படத்தை ஸ்ரீதேவி நடித்த ‘Mom’ படத்தை இயக்கிய ரவி உத்யவர் இயக்குகிறார். இந்த படத்தில் மாளவிகா ஒரு வலுவான அதிரடி வேடத்தில் நடித்து வருவதாகவும், அதற்காக இந்த லாக்டவுன் காலங்களில் சண்டை திறன்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மிக முக்கியமாக அவர் இந்த படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி சம்பளத்தைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. அது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சம்பளத்தை விட அதிகமானதாகும். நயன்தாரா தற்போது தனது பிராந்திய படங்களுக்காக ரூ. 4 கோடி பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்