• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ‘ ஹவுஸ் ஓனர்’

July 16, 2018 தண்டோரா குழு

‘நாடோடிகள், யுத்தம் செய், பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற பல படங்களில் நடித்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குனர், டிவி தொகுப்பாளர், பேஷன் டிசைனர் என்று பல துறைகளில் கலக்கி வருகிறார்.

இவர் இயக்குநராக களமிறங்கிய படம் ‘ஆரோகணம்’. இதனையடுத்து ‘நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ ஆகிய 2 படங்களை இயக்கியுள்ளார். தற்போது, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

‘ஹவுஸ் ஓனர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் பசங்க’ படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாகவும், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேச்கர் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும், ‘ஆடுகளம்’ கிஷோர் குமார், ஸ்ரீரஞ்சினி, கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார் பிரேம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

மேலும் படிக்க