• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் அக்.30ம் தேதி திருமணம்

October 6, 2020 தண்டோரா குழு

க்யுன் ஹோ கயா னா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை காஜல் அகர்வால். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல், பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பொம்மலாட்டம், சரோஜா, நான் மஹான் அல்ல, மாற்றான் போன்ற படங்களில் நடித்தார். விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருந்தார்.

காஜல் அகர்வால் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிறது.இன்னும் பிசியான நடிகைகளில் ஒருவராகவே திகழ்கிறார்.இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் வரும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காஜலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

மேலும் படிக்க