• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள் – மேடையில் அழுத நடிகை

October 30, 2019 தண்டோரா குழு

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பெற்ற பாடல் காட்சியின் கண்ணசைவு மூலம் பிரியா பிரகாஷ் வாரியர் பிரபலமானார். இதே பாடல் காட்சியில் இடம் பெற்ற மற்றொரு நடிகை நூரின் ஷெரீப்பும் பிரபலமாகி இருந்தார்.படத்தில் அவரது நடிப்பும்,கதாபாத்திரமும் இளைஞர்கள் மனதை ஈர்த்தது.

இதைத் தொடர்ந்து நூரின் ஷெரீப்புக்கும் அதிக படவாய்ப்புகள் அமைந்தது. இந்நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் புதிய சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க நூரின் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாலை 4 மணிக்கு வர வேண்டிய நூரின் 6 மணிக்கு வந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள், நூரின் ஷெரீப் வந்தபோது ரகளையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரசிகரின் கை நூரினின் மூக்கில் பலமாகப்பட்டுள்ளது.

இதனால் அவரது மூக்கு உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அப்போது வலி தாங்க முடியாமல் மேடையிலேயே நூரின் கதறி அழுதார். எனினும், வலியை பொறுத்துக் கொண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக, தன்னை அருகில் உள்ள ஓரு ஓட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் நூரின் விளக்கம் அளித்தார்.

ரசிகர்கள் தாக்கியதில் நூரினின் மூக்கில் லேசான காயம் தான் ஏற்பட்டது. ஆனால் வலி கடுமையாக இருந்ததால் அவர் கதறி அழுதுவிட்டதாக நூரினின் தாயார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க