• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கு இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகள் முடக்கம்!

December 28, 2018 தண்டோரா குழு

சேவை வரி பாக்கியை செலுத்தாததால் தெலுங்கு இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகளை சேவை வரி செலுத்தாத காரணத்தால் ஜிஎஸ்டி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் மகேஷ் பாபு 2007 – 2008 ஆம் ஆண்டில் சினிமா, விளம்பரப்படத்தில் நடித்து வந்த வருமானத்திற்காக சேவை வரி 18 லட்சத்து 50 ஆயிரத்தை இன்னும் கட்டவில்லை. இதுகுறித்து மகேஷ் பாபுவை சந்திக்க அதிகாரிகள் பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது. வரி மற்றும் வரிக்கு வட்டி, அபராதம் ஆகியவற்றை சேர்த்து அவர் 73 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும். அவரது ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து 42 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி வெள்ளிக்கிழமை அன்று பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டதாகவும்”, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க