• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை மாற்றும் வரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டேன்-பாரதிராஜா!

April 13, 2018 tamilsamayam.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றாவிட்டால் சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

திரைத்துறையினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை,காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் சினிமாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்ளவில்லை. அதில் முக்கியமாக இயக்குனர் பாரதிராஜா கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து பாரதிராஜாவிடம் “நீங்கள் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என்றதற்கு, “ஒவ்வொரு மாநிலத்திலும்,அந்தந்த மாநிலத்தின் பெயரில் தனித்தனியாக நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.கேரளாவில் “கேரள நடிகர்கள் சங்கம்”,கர்நாடகாவில் “கர்நாடக நடிகர்கள் சங்கம்”, ஆந்திராவில் “ஆந்திர நடிகர்கள் சங்கம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.ஆனால்,இங்கு மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது.அந்தப் பெயரை தமிழக நடிகர்கள் சங்கம் என்று மாற்றும்வரை,அந்த சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும்,போராட்டங்களிலும் பங்கேற்க மாட்டேன்” என்றார்.

மேலும் படிக்க