• Download mobile app
27 Dec 2025, SaturdayEdition - 3608
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘துருவங்கள் 16’ இயக்குனருடன் இணையும் அருண் விஜய்?

April 25, 2019 தண்டோரா குழு

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்குநர் கெளதம் மேனனின் ஒன்றாக பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நரகாசுரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்விந்த் சாமி, ஸ்ரேயா,சுந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. விரைவில் அப்படம் திரைக்குவரவுள்ளது.

இதற்கிடையில், தனது மூன்றாவது படம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் அண்மையில் அறிவித்திருந்தார்.அப்போது இது எனக்கு மிகவும் பிடித்த கதை விரைவில் முழுவிவரமும் வெளியிடுகிறேன் என தெரிவித்திருந்தார். பின்னர் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘கண்ணாடி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதில் கார்த்திக் நரேன் பிசியானார். இந்நிலையில், கார்த்திக் நரேன் அடுத்ததாக அருண் விஜயை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க