• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தளபதி 62’ க்கு மட்டும் சிறப்பு அனுமதியா?கடுப்பில் இயக்குனர்கள்

March 20, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான  ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்,இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், ராதாரவி, பழ.கருப்பையா,வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் த இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழு  திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து திரைப்பட பணிகளை நிறுத்துமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.

இந்நிலையில், ‘தளபதி 62’ டீம் 2 நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று  சென்னையில் ஷூட்டிங் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜய்62 படக்குழு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க