தல அஜீத் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவான படம் விசுவாசம். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் நடிக்க உள்ளார்.
இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் தான் என கூறப்படுகிறது.
சமீபத்தில் அஜீத், வினோத், போனிகபூர் கலந்து கொண்ட கதை விவாதம் சென்னையிலுள்ள போனிகபூர் இல்லத்தில் நடந்தது.ஆனால் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் ‘தல 59′ படத்தின் பூஜை இன்று நடந்தது. பின்னர் போனிகபூர் புரொடக்ஷன் சார்பில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அஜீத் பெயரிடப்படாத அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்றும், இந்த படத்தின் நடிகர்கள், டெக்னீசியன்கள் விபரம் விரைவில் வெளியாகும் என்றும், இது பிங்க் ரீமேக்தான் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் தல 59 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
அஜித் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் `பில்லா’, `ஏகன்’, `மங்காத்தா’, `பில்லா 2′, ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஆல்பம் ஹிட்டானது. இந்நிலையில்,அஜித் – யுவன் மீண்டும் இணைந்தால் அது அஜித் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்