• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு கௌதம் மேனன் விளக்கம்

March 29, 2018 தண்டோரா குழு

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், கெளதம் மேனன் மீது நேற்று குற்றசாட்டு வைத்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கௌதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில்,

நரகாசுரன் படத்திற்கு கார்த்திக் நரேனுக்கு தேவையான அனைத்தையும் நானும் என் குழுவும் செய்து கொடுத்தோம். இப்படத்தில் நான் எந்த விதத்திலும் பங்குதாரர் இல்லை. கார்த்திக் நரேனுக்கு நான் இந்த படத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் அதை நான் முழு மனதோடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, துருவநட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களின் படப்பிடிப்பு முடியவில்லை. அது முடிந்த பிறகு இவ்வருடத்திற்குள் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கு நான் ஒரு வழிகாட்டியாகவே இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கார்த்திக் நரேனுடனான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டதாகவும், படத்தின் வெளியீட்டை நோக்கி வேலைகள் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க